வவுனியா கல்நாட்டினகுளம் கிராமத்தில் இருந்து வவுனியா அரசா அஞ்சலகத்தினூடாக அவுஸ்திரேலியா பிறிஸ்பேனுக்கு அனுப்பப்பட்ட பதிவுத்தபால் உடைக்கப்பட்டு உள்ளிருந்த புகைப்படங்களை எடுத்துவிட்டு ஆவணங்கள் மட்டும் வழங்கப்பட்டுள்ளதாக ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது கணவருக்கு மனைவியால் அனுப்பப்ட்ட தனது மற்றும் பிள்ளைகளின் புகைப்படங்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பொன்ஸர் விடயத்திற்காக படங்கள் அனுப்பப்பட்டதாகவும் இது தொடர்பாக வவுனியா தபாலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அவருடன் தங்கியிருக்கும் இன்னுமொரு வவுனியா இளைஞனுக்கும் இதேமாதிரியாக சம்பவம் கடந்தமாதம் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தக்குற்றம் தொடர்பான செய்திகள் ஆவணங்களாக வெளியேறுவதனைத் தடுக்க வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பார்சல்கள், பொதிகள், கடிதங்கள் யாவும் விசேட புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக