வெள்ளி, 14 மே, 2010

நடிகை குஷ்பு இன்று திமுகவில் இணைகிறார்..!!

நடிகை குஷ்பு இன்று மாலை திமுகவில் இணைகிறார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன அந்தச் செய்தியில், தனக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய குஷ்பு தனக்கு அரசியலில் இணைய ஆசை இருப்பதாகவும், விரைவில் நேரடி அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். கூடவே சோனியா, ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களைப் பிடிக்கும் என்றும், காங்கிரஸ் கொள்கைகளில் ஈடுபாடு என்றும் குஷ்பு கூறியிருந்ததால் விரைவில் காங்கிரசில் சேரப்போவதாகவே தகவல்கள் வெளியாகியிருந்தன.தமிழகக் காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும், குஷ்பு காங்கிரசில் இணைந்தால் வரவேற்போம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அதிரடித் திருப்பமாக தி.மு.கவில் இணைகிறார் நடிகை குஷ்பு. சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று மாலை 5.00 மணியளவில் தி.மு.க. தலைவரும், முதல்வருமான கலைஞர் முன்னிலையில் தி.மு.கவில் இணைகிறார் குஷ்பு என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக