
அந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம், இந்தியாவைப் போன்ற ஆட்சி முறையை இலங்கையில் அமுல்படுத்துவது சாத்தியமில்லை என்று தெரிவித்தார். இலங்கைக்குப் பொருத்தமான வகையில், அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் புதிய முறையை உருவாக்க வேண்டும். அந்த முறை தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என அனைவருக்கும் கௌரவம் அளிக்கும் வகையிலும் சம உரிமை கொடுக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.இலங்கையின் வடக்கே தமிழ் மக்களின் வீடுகள் மற்றும் நிலங்களை சிங்களவர்கள் ஆக்கிரமித்திருப்பதாகக் கூறப்படும் புகார்களை முற்றிலுமாக நிராகரித்தார்.இந்திய இலங்கை உடன்பாட்டின் மூலம் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலான அம்சங்கள் ஏற்கெனவே அமுல்படுத்தப்பட்ட நிலையில், காவல்துறை, நிலம் உள்ளிட்டவற்றின் அதிகாரம் தொடர்பாக இன்னும் பேசி வருவதாகவும், வடக்குகிழக்கில் மாகாண சபை அமைக்கப்பட்டு பொறுப்பான தலைவர்கள் வந்தால் தான் அதன் பிறகு மற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் சிலர் பிரச்சினையை அரசியலாக்காமல், சகஜ நிலை மேம்பட உதவ வேண்டும் என்றும் பிரசாத் காரியவசம் வலியுறுத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக