புதன், 14 ஏப்ரல், 2010

மகிழ்ச்சிகரமான புதுவருடம் எதிர்கால சுபீட்சத்துக்கு வழி வகுக்கட்டும்.. -ஜனாதிபதி

தாய்நாடு ஐக்கியப்படுத்தப்பட்ட பின்னர் இணக்கமான மற்றும் திருப்தியான நிலையில் கொண்டாடப்படும் முதலாவது புதுவருடம் இதுவாகும். இது போன்ற புதுவருட பண்டிகைகள் எமது மக்களை இதயத்தாலும் மனதாலும் மேலும் ஐக்கியப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்பது எனது நம்பிக்கையாகுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆவர் மேலும் தெரிவிக்கையில் சிங்களவர்களாலும் தமிழர்களாலும் ஒரே வகையில் கொண்டாடப்படும் புதுவருட கொண்டாட்டங்கள் எமக்கிடையிலான உறவுகளை அங்கீகரிப்பதற்கு மிகவும் பொருத்தமானவையாகும். எமது நாட்டு மக்களிடம் உள்ள பிணைப்புகளை மேலும் வலுப்படுத்தும் பலமான கலாசார பாரம்பரியங்களின் தொடர்ச்சியாகவே இதனைக் காண முடிகின்றது. மக்களிடம் புதுவருடத்தின் மகிழ்ச்சியையும் அர்த்தத்தையும் கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் செய்துள்ளது. விவசாய அபிவிருத்தி மற்றும் வாழ்க்கை நெறிமுறைகள் மூலம் நாட்டுக்கு சுபீட்சத்தை கொண்டுவர நாம் ஆவன செய்துள்ளோம். எதிர்கால பரம்பரையான எமது பிள்ளைகளே புதுவருடத்தின் உண்மையான தார்ப்பரியத்தைப் பெரிதும் உணர்ந்து கொள்ள வேண்டியவர்களாவர். ஆயிரக்கணக்கான வருடங்களாகப் பாதுகாக்கப்பட்டு வரும் சிறந்த விழுமியங்கள் மற்றும் பாரம்பரியங்களை அவர்களுக்குப் போதிக்க வேண்டியது ஒருதேசம் என்ற வகையில் எமது பொறுப்பாகும். அத்துடன் எமது நாட்டை வளப்படுத்தியுள்ள கலாசார மரபுரிமைகளையும் அவர்களிடம் கையளிக்க வேண்டும். ஒவ்வொரு குடியிருப்பும் புதுவருட பாரம்பரியங்களை எதிர்காலத்தின் சுபமான ஆரம்பத்துக்கான நம்பிக்கையுடன் மேற்கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பமாகும். எமது நாட்டின் ஒற்றுமையையும் பெருமையையும் பிரதிபலிக்கும் இந்த சிங்கள - தமிழ் புதுவருடம் மகிழ்ச்சிஇ சமாதானம்இ பகிர்ந்து கொள்ளல் மற்றும் திருப்தியுறுதல் போன்ற உணர்வுடன் அனைவராலும் கொண்டாடப்பட்டு எம்மை எதிர்கால சுபீட்சத்துக்கு இட்டுச் செல்லும் என நம்புகிறேன். அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான புதுவருட வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக