வியாழன், 1 ஏப்ரல், 2010

இரு இலங்கையர்களுக்கு குவைத்தில் மரண தண்டனை விதிப்பு

இரு இலங்கையர்களுக்கு குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொலைக் குற்றச்சாட்டின்பேரில் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்குமே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு குவைத்தில் வேலை செய்தபோது தமது எஜமானரை கொலைசெய்த பின்னர் அங்கிருத்து தலைமறைவாகியுள்ளனர். இதனையடுத்து தாக்கல்செய்த வழக்கில் இவர்கள் குற்றவாளியாக காணப்பட்டு வழக்கில் ஆஜராகாமலே இவர்கள்மீது மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஹஜ் மொய்தீன் என்ற ஆண் சந்தேகநபர் சாரதியாகவும், சிஸா சிஃபா என்ற பெண் பணிப்பெண்ணாகவும் குறிப்பிட்ட வீட்டில் பணி புரிந்துள்ளனர். 2006 டிசம்பர் 8ம்திகதி தமது எஜமான் தூங்கிக் கொண்டிருந்த போது அவரது கழுத்தை கயிற்றால் இறுக்கி இவர்கள் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக