சனி, 24 ஏப்ரல், 2010

ஒருமாத காலத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையாக ஐ.ம.சு.கூட்டமைப்பு மாறும் -சிறிபாலடி சில்வா..!

தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 144 ஆசனங்களை பெற்றுள்ள போதிலும் இன்னம் 1மாதகாலத்துக்குள் அது மூன்றில் இரண்டு பெரும்பான்மையாக மாற்றமடையும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார் கொழும்பில் அமைந்துள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று காலை இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையி;ல் தேர்தலில் வரலாற்று ரீதியான வெற்றியை ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு பெற்றுக்கொண்டுள்ளது இந்நிலையில் 144ஆசனங்கள் என்பது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமாக மாற்றமடையும் அதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன. பாராளுமன்றத்தின் முதலாவது அமர்விலேயே சில எதிர்கட்சி எம்பிக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை 1வது பாராளுமன்ற அமர்வின் போது ஆளும் கட்சியுடன் எதிர்கட்சி ஒத்துழைப்புடன் செயற்பட்டது அதனையிட்டு எதிர்கட்சிக்கு நன்றி தெரிவிப்பதுடன் மகிழ்ச்சியடைகிறோம் தொடர்ந்தும் இவ்வாறு ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக