கிறிஸ்துமஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட 90சட்டவிரோத குடியேறிகள் அவுஸ்திரேலிய நிலப்பரப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இலங்கை, ஈரான், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேறிகளே இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்படவிருந்த இவர்களுக்கு தொடர்ந்து அகதி அந்தஸ்துகோரும் அனுமதி வழங்கப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய கடற்படை அதிகாரிகள் கூறியுள்ளனர். கிறிஸ்துமஸ் தீவில் நிலவுகின்ற இடநெருக்கடி காரணமாகவே இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவுஸ்திரேலிய அரசு கூறியுள்ளது. எனினும் அந்நாட்டு எதிர்க்கட்சிகள் இந்நடவடிக்கையை கடுமையாக எதிர்த்துள்ளன.
திங்கள், 29 மார்ச், 2010
கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 90சட்டவிரோத குடியேறிகள் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசம்..!
கிறிஸ்துமஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட 90சட்டவிரோத குடியேறிகள் அவுஸ்திரேலிய நிலப்பரப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இலங்கை, ஈரான், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேறிகளே இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்படவிருந்த இவர்களுக்கு தொடர்ந்து அகதி அந்தஸ்துகோரும் அனுமதி வழங்கப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய கடற்படை அதிகாரிகள் கூறியுள்ளனர். கிறிஸ்துமஸ் தீவில் நிலவுகின்ற இடநெருக்கடி காரணமாகவே இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவுஸ்திரேலிய அரசு கூறியுள்ளது. எனினும் அந்நாட்டு எதிர்க்கட்சிகள் இந்நடவடிக்கையை கடுமையாக எதிர்த்துள்ளன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக