ரஷ்யாவிற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை 10.50 மணியளவில் நாடு திரும்பியுள்ளார். ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸிற்குச் சொந்தமான விசேட விமானமொன்றின் மூலம் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இன்றுகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 35ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையின் அரசியல் தலைவர் ஒருவர் ரஸ்யாவுக்கான விஜயத்தினை மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும். இதற்குமுன்னர் இலங்கையின் முதல் பெண் பிரதமரான சிறீமாவோ பண்டாரநாயக்க ரஸ்யாவுக்கான விஜயத்தினை மேற்கொண்ட அரச தலைவராவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக