மோட்டார் போக்குவரத்து பிரிவின் சிரேஸ்ட அத்தியட்சகர் இந்து கருணாரட்ன இரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வந்த இராணுவத்திலிருந்து தப்பியோடிய படைச் சிப்பாய்களுக்கு பொலிஸ் வாகனமொன்றை குறித்த உயரதிகாரி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது மேலும் சில குற்றச்செயல்களுடன் குறித்த உயர் பொலிஸ் அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் போக்குவரத்து பிரிவிற்கு சென்ற இரகசிய பொலிஸார் குறித்த பொலிஸ் அதிகாரியை கைது செய்து அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக