
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா இன்று யாழ்ப்பாணத்தில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டார். எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, மக்கள் விடுதலை முன்னணி தலைவர் (ஜே.வி.பி) சோமவன்ச அமரசிங்க, மனோகணேசன், ரவூப் ஹக்கீம், டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன, அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர். நல்லூர் கந்தசுவாமி கோயில் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகத்தை சந்தித்த இக்குழுவினர் பின்னர் வர்த்தகப் பிரமுகர்களையும் சந்தித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் விசேட கூட்டமொன்றும் நடைபெற்றுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக விசேட பொருளாதார திட்டமொன்றை தயாரிப்பதாகவும் ஜெனரல் பொன்சேகா அங்கு தெரிவித்துள்ளார். யாழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு குறுகியகால மற்றும் நிரந்தர தீர்விiனை வழங்க எதிர்பார்ப்பதாகவும், யாழ் மக்களின் அபிலாசைகளை தாம் நன்கு அறிவதாகவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். இதேவேளை யாழ்ப்பாணத்திற்கான புது யுகத்தை உருவாக்குவதாக இதன்போது உரையாற்றிய எதிர்க்கட்சித் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மானிப்பாய் வீதியில் சரத்பொன்சேகாவின் தேர்தல் பிரச்சார அலுவலகமொன்றும திறந்து வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக