உங்களின் கிராம நிகழ்வுகளின் தொகுப்பை எமது மின்னஞ்சல் முகவரியான newspvm119@gmail.com அனுப்பி, உங்களின் கிராமத்தின் பெருமையை உலகறிய செய்யுங்கள். Free SMS ALERT. Local,International,Sports,Commercial,Weather, And other Breaking News -Follow @poorveegam, And Send to 40404
சனி, 30 ஜனவரி, 2010
புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தலைமையிலான குழுவினர் மீள்குடியேற்றப்பட்ட மன்னார் மாவட்ட பிரதேசங்களுக்கு விஜயம்.. (புகைப்படங்கள் இணைப்பு)
நேற்றைய தினம் மன்னார் மாவட்ட முருங்கன் அடம்பன் உயிலங்குளம் மாந்தைகிழக்கு பாப்பாமோட்டை காத்தான்குளம் உட்பட பல பகுதிகளுக்கு புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் பிரதிநிதிகள் குழு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தது. மேற்படி பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்திருந்த புளொட் பிரதிநிதிகள் குழு அங்குள்ள மக்களின் நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன்இ அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். புளொட் தலைவர் சித்தார்த்தனுடன்இ புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன்இ முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் முக்கியஸ்தருமான வை.பாலச்சந்திரன்இ புளொட்டின் வன்னிப்பிராந்திய அமைப்பாளர் பவன் எனும் சிவநேசன் புளொட்டின் நிர்வாகப் பொறுப்பாளரான ஆர்.ஆர் எனும் ஆர்.ராகவன் புளொட்டின் மன்னார் மாவட்டப் பொறுப்பாளர் சிவசம்பு புளொட்டின் வவுனியா மாவட்ட அரசியல் பொறுப்பாளர் சிவம் உட்பட பலரும் இந்த விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். தமிழ் அமைப்புக்களில் இதுவரை காலங்களிலும் மன்னார் மாவட்ட மேற்படிப் பரதேசங்களுக்கு விஜயம் செய்ததும் மீள்குடியேற்றப்பட்ட மக்களைச் சந்தித்துக் கதைத்ததும் புளொட் அமைப்பினர் மட்டுமே என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. (தகவல்புகைப்படங்கள்.. புளொட்ஊடகப்பிரிவு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக