ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக பி.பி.சிக்கு பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொது மக்களுக்கு நிரூபணமில்லாத உணர்ச்சிபூர்வமான தகவல்களை ஜெனரல் சரத்பொன்சேகா வெளியிட்டதாக பாதுகாப்பு செயலர் குறிப்பிட்டுள்ளார். எனினும் தேர்தல் முடிவை நிராகரிக்கப்பதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமென்றும் பி.பிசிக்கு சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்க வேண்டாமென விமான நிலையத்திற்கு அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும், தன்மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்படலாமென அஞ்சுவதாகவும் பி.பி.சிக்கு அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தனக்கெதிராக தவறான குற்றச்சாட்டுக்களை சுமத்தியமைக்காக ஜெனரல் சரத்பொன்சேகாமீது ஆத்திரம் கொண்டுள்ளதாக பி.பிசிக்கு பாதுகாப்புச்செயலர் குறிப்பிட்டுள்ளார். அவர் சில சட்டங்களை மீறியிருப்பதால் தாங்கள் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக