புதன், 9 டிசம்பர், 2009

சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் ரணில் விக்கிரமசிங்க இந்தவார இறுதியில் யாழ் விஜயம்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஜெனரல் சரத்பொன்சேகாவின் ஆதரவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இந்தவார இறுதியில் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துக் கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் யாழ்ப்பாணத்தில் உள்ள சகல மதத்தலைவர்களையும் சந்தித்து ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு ஆதரவு திரட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தின் முக்கிய பிரதேசங்களில் ரணில் விக்கிரமசிங்க தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக