சனி, 12 டிசம்பர், 2009

பிரபாகரன் மறைவிடத்தில் ராணுவ நினைவு சின்னம் !

விடுதலைப் புலிகளி்ன் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் போரில் உயிரிழந்த இலங்கை ராணுவ வீரர்களின் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. நந்திக்கடல் அருகே உள்ள புதுமத்தாளன் என் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சின்னத்தை அந் நாட்டு அதிபர் ராஜபக்சே திறந்து வைத்தார். முன்னதாக இப் பகுதிக்கு வந்த ராஜபக்சேவுக்கு ராணுவ அணிவகுப்புடன் மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவத்தி்ன் புதிய பிரிவான வன்னிப் பிரிவின் தலைமையகத்தையும் ராஜபக்சே திறந்து வைத்து, அதன் புதிய கொடியையும் அறிமுகப்படுத்தினார். இதையடுத்து வவுனியா செட்டிக் குளத்தில் உள்ள முகாமில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களிடையே தமிழில் அவர் பேசினார். அவர் கூறுகையில், வரும் ஆண்டு ஜனவரி 31ம் தேதிக்குள் அனைத்து தமிழர்களும் அவர்களுடைய சொந்த ஊர்களிலேயே குடியமர்த்தப்படுவார்கள் என்றார். பின்னர் மடு என்ற இடத்தில் உள்ள கத்தோலிக்க ஆலயத்துக்கும் ராஜபக்சே சென்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக