வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில் தமது சொந்த இடங்களுக்கு செல்வதற்கு விண்ணப்பத்திருந்த கர்ப்பிணித் தாய்மார்கள், மற்றும் கைக் குழந்தைகளையுடைய தாய்மார்கள் உள்ளடங்கிய சுமார் 30குடும்பங்கள் முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் நலன்புரி நிலையங்களிலிருந்து அழைத்துவரப்பட்டு வவுனியா கச்சேரியில் வைத்து விடுவிக்கப்பட்டிருந்தனர். இருந்தும் இவர்களுக்கான பயண ஒழுங்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாத நிலையில் கடந்த 05நாட்களாக வவுனியா கச்சேரி, பஸ் நிலையம் என்பவற்றில் தங்கியிருந்தனர். இவர்களில் சில குடும்பங்கள் தமது சுய முயற்சியின் பயனாக தமது சொந்த இடமான யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளபோதிலும் பல குடும்பங்கள் தற்போது கோயில்குளம் சிவன்கோவில் நிர்வாகத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோயில்குளம் சிவன்கோவில் பகுதியில் தங்கியுள்ள இம்மக்களைச் சந்தித்த புளொட் அமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் (விசுபாரதி) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன் மற்றும் புளொட் முக்கியஸ்தர்கள் அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டுள்ளனர். அத்துடன் அவர்கள் தொடர்பாகவும் அவர்களுக்கு செய்து கொடுக்கவேண்டிய உதவிகள் குறித்தும் கோயில்குளம் சிவன்கோயில் நிர்வாகத்தினருடனும் கலந்துரையாடலையும் மேற்கொண்டு குறித்த மக்களுக்கான போக்குவரத்து உள்ளிட்ட உதவிகளைக் செய்ய ஆவனசெய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.சனி, 3 அக்டோபர், 2009
நலன்புரி நிலையங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு, நிர்க்கதியான மக்களுடன் புளொட் பிரதிநிதிகள் சந்திப்பு
வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில் தமது சொந்த இடங்களுக்கு செல்வதற்கு விண்ணப்பத்திருந்த கர்ப்பிணித் தாய்மார்கள், மற்றும் கைக் குழந்தைகளையுடைய தாய்மார்கள் உள்ளடங்கிய சுமார் 30குடும்பங்கள் முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் நலன்புரி நிலையங்களிலிருந்து அழைத்துவரப்பட்டு வவுனியா கச்சேரியில் வைத்து விடுவிக்கப்பட்டிருந்தனர். இருந்தும் இவர்களுக்கான பயண ஒழுங்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாத நிலையில் கடந்த 05நாட்களாக வவுனியா கச்சேரி, பஸ் நிலையம் என்பவற்றில் தங்கியிருந்தனர். இவர்களில் சில குடும்பங்கள் தமது சுய முயற்சியின் பயனாக தமது சொந்த இடமான யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளபோதிலும் பல குடும்பங்கள் தற்போது கோயில்குளம் சிவன்கோவில் நிர்வாகத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோயில்குளம் சிவன்கோவில் பகுதியில் தங்கியுள்ள இம்மக்களைச் சந்தித்த புளொட் அமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் (விசுபாரதி) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன் மற்றும் புளொட் முக்கியஸ்தர்கள் அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டுள்ளனர். அத்துடன் அவர்கள் தொடர்பாகவும் அவர்களுக்கு செய்து கொடுக்கவேண்டிய உதவிகள் குறித்தும் கோயில்குளம் சிவன்கோயில் நிர்வாகத்தினருடனும் கலந்துரையாடலையும் மேற்கொண்டு குறித்த மக்களுக்கான போக்குவரத்து உள்ளிட்ட உதவிகளைக் செய்ய ஆவனசெய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக