வெள்ளி, 4 செப்டம்பர், 2009

யாழ் பிரதி முதல்வர் பதவி ஒரு ஆண்டின் பின்னர் முஸ்லீம் பிரதிநிதிக்கு! பதியுதீன்- டக்ளஸ் ஒப்பந்தம்!

யாழ் மாநகர தேர்தலில் ஜ.ம.சு.மு. யுடன் இணைந்து போட்டியிட்டிருந்த ஈ.பி.டி.பி, அ.இ.மு.கா இடையே முதல்வர், பிரதி முதல்வர் தொடர்பாக நீடித்துவந்த இழுபறி முடிவுக்கு வந்து முதல்வராக ஈ.பி.டி.பி.யை சேர்ந்த யோகேஸ்வரியும், பிரதி முதல்வராக இளங்கோ அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களிற்கிடையாக காணப்பட்டுள்ள இணக்கப்பாடு தொடர்பாக அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் அவர்களிடம் கேட்கப்பட்டபோது. ஒரு வருடம் வரை பிரதி முதல்வர் பதவியை ஈ.பி.டி.பி கொண்டிருக்கும் என்றும், அதன் பின்னர் பிரதி முதல்வர் பதவி தமது கட்சியை சேர்ந்த உறுப்பினருக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளதுடன். இதற்கான இணக்கப்பாடு காணப்பட்டு டகள்ஸ் தேவானந்தாவுக்கும் தனக்குமிடையிலான ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப் பட்டுள்ளதாகவும் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக