புதன், 12 நவம்பர், 2014

மங்கள சமரவீர அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளார்..!!!

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள உள்ளார்.
அரசாங்கத் தரப்பிற்கும் மங்கள சமரவீரவிற்கும் இடையில் சிங்கப்பூரில் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

ஆளும் கட்சியில் இணைத்துது கொள்வதற்காக மங்கள சமரவீரவிற்கு அரசாங்கம் 1200 மில்லியன் ரூபா பணத்தை வழங்கியதாக சிங்கப்பூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எந்தவொரு நிலைமையின் கீழும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளத் தயார் என மங்கள சமரவீர அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிறியதொரு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டாலும் இணைந்து கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

துறைமுக அபிவிருத்தி அல்லது வெளிவிவகார அமைச்சுப் பதவியை வழங்கினால் மட்டுமே ஆளும் கட்சியில் இணைந்து கொள்வேன் என மங்கள கோரி வந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


இந்தக் கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்திருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளர் ஒருவரை நிறுத்தக் கூடாது எனவும், பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டுமெனவும் மங்கள சமரவீர ஐக்கிய தேசியக் கட்சியிடம் கோரியிருந்தார்.

இந்தக் கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்துள்ளது.

இதனை அடுத்து மங்கள சமரவீர சிங்கப்பூருக்கு சென்றிருந்தார்.

சிங்கப்பூரில் வைத்து ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்வது குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் விதித்த நிபந்தனைகளை குறைத்துக்கொண்டு பணக் கொடுக்கல் வாங்கல் அடிப்படையில் மங்கள சமரவீர ஆளும் கட்சியில் விரைவில் இணைந்து கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக