பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பெயரை, ’பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர்’ என மாற்ற பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து தி இந்துவிடம் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் கூறியபோது, ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மத்திய அரசின் கோப்புகளிலும் இதே பெயரில் குறிப்பிடப்படுகிறது. இதில் ஜம்முவின் சில பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
எனவே நாட்டின் தனி அந்தஸ்து பெற்ற மாநிலத்தைப்போல் அந்தப்
பகுதியையும் “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர்’ என அழைக்க வேண்டும் என பிரதமர் முடிவு செய்துள்ளார்’ எனக் கூறுகிறார்கள்.
இந்த முடிவு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாக இருப்பதாகவும் இதன்மூலம் முழு உண்மையையும் பிரதமர் இந்த உலகிற்கு தெரிவிக்க எண்ணுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக