பிரித்தானியாவின் க்ளோஸ்டஷெயார் (Gloucestershire) பிரதேசத்தில் வங்கி அட்டைகள் மூலம் பொதுமக்களின் பணத்தினை கொள்ளையடிக்க முயற்சித்தமைக்காக இலங்கையர் மூவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
செல்டென்ஹாம் மற்றும் குளோஸ்டர் பகுதிகளில் உள்ள 13 ஏ.ரி.எம்களில் card trapping devices சாதனங்களைப் பொருத்தி, வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை திரட்டி அவற்றின் ஊடாக மோசடியில் ஈடுபட திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பசீர் இப்ராஹிம் (வயது 21), அசோக் பாலசுப்பரமணியம் (வயது 22) மற்றும் தங்கவேல் வில்வானந்தம் (வயது 50) ஆகியோர் இவ்வாறு குற்றச் செயலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
2013ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் இந்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன.
இப்ராஹிம் மற்றும் வில்வானந்தம் ஆகிய இருவருக்கும் ஒரு ஆண்டு கால சிறைத்தண்டயையும் குளோஸ்டர் கிரவுன் நீதிமன்றம் விதித்துள்ளது.
கைது செய்யப்பட்டு 16 மாதம் சிறையிலிருந்த அசோக் பாலசுப்பரமணியம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக