வியாழன், 1 மே, 2014

வவுனியாவில் "மே தினத்தை" முன்னிட்டு மாபெரும் பேரணியும் பொதுக்கூட்டமும்..!!(படங்கள் இணைப்பு )

வவுனியாவில் அகில உலக "மே தினத்தை" முன்னிட்டு மாபெரும் பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

இன்று காலை 09:30 மணியவில் தொழிலார்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் வவுனியாவில் ஐக்கியப்பட்ட தொழிலார்களின் புரட்சிகர மேதின பேரணியும் மாபெரும்
பொதுக்கூட்டமும் வவுனியா சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் திரு,ந.தேவகிருஷ்ணன் தலைமையில் பல கோரிக்கைகளை முன்வைத்தே இப் பேரணி ஆரம்பிக்கப்பட்டது.

முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளாவன ...!

1. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறை.
2.மின்சாரக் கட்டண அதிகரிப்பை நிறுத்து.
3.இனப் பிரச்சனைக்கு சுய நிர்ணய அடிப்படையில் தீர்வை முன்வை.
4.13ம் திருத்த சட்டத்தை முழுமையாக அமுல் படுத்து.
5.வவுனியா சிறு வியாபாரிகளுக்கு அநிதீ இழைக்காதே..
6.வவுனியா சிறு வியாபாரிகளுக்கு நிரந்தரமாக தொழில் செய்யும் இடத்தை வழங்கு.
7.வடக்கில் தொழில் நீதிமன்றத்தை உடன் இயங்க செய்.
8.அரச சேவையில் இருக்கும் ஒப்பந்த அடிப்படை ஊழியர்களை நிரந்தரமாக்கு.
9.வாழ்க்கை சிலவுக்கான ஊதியத்தை வழங்கு.
10.இலவசக் கல்விக்கு தேசிய வருவாயில் 6% ஒதுக்கீடு செய்.
11.அரசியல் கைதிகளை விசாரணை செய் அல்லது விடுதலை செய், காணமல் போனோரின் விபரங்களை வெளியிடு.
12.வடக்கு கிழக்கில் அவலப்படும் எண்பதினாயிரம் விதவைகளின் வாழ்வாதாரத்திற்கான உதவிகளை உடனே முன் எடு.
13.வடக்கின் தேசிய வளங்களை அரச இயந்திர ஆதரவுடன் சுரண்டுவதை நிறுத்து.
14.வடக்கில் உள்ள நாட்டு மாடுகளை சட்டவிரோதமாக இறைச்சிக்கு கடத்துவதை தடுத்து நிறுத்து.
15.உள்ளூர் விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடு.
16.இலங்கையின் இறமைக்கும் ஐக்கியதிக்கும் வேட்டு வைத்து தமது பொருளாதார, மற்றும் அரசியல் ராணுவ நலன்களுக்காக தலையீடு செய்து வரும் இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் மேற்குலக வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலை எதிர்ப்போம்.
17.தமிழ்,சிங்கள,முஸ்லிம்,மலையக தொழிலாள சத்திகளே ஐக்கியப் படுவீர்.

மேற்படி மாபெரும் பேரணி வவுனியா நகர இலங்கை போக்குவரத்து சபை தரிப்பிடத்திலிருந்து காலை 09:30 மணிக்கு ஆரம்பமாகி மேற்கண்ட  கோசங்களை உரத்த குரலில் எழுப்பியவாறு  ஊர்வலமாக வவுனியா நகரசபை பழைய மண்டபத்தை சென்றடைந்தனர். மேற்படி பேரணியில் வவுனியா நகரசபை முன்னைநாள் துணை முதல்வரும், புளொட் அமைப்பின் முக்கியஸ்தரும், வவுனியா கோவில்குள  இளைஞர் கழக ஸ்தாபகருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும், பு.ஜ.மா கட்சி பொதுச் செயலாளர் தோழர்.க.செந்திவேல், வீதி பராமரிப்பு தொழிலாளர் சார்பாக க.மகேந்திரன், சுகாதார சேவையாளர் சங்க கண்ணன், நகர நன்னீர் மீனவர் சங்க அமரசிங்க, வவுனியா சிறு வியாபாரிகள் சங்க உமர்தீன் ஜப்கான், உள்ளூராட்சி மன்ற தொழிலாளர் கவிரியல் கோல்டன், மாற்றத்தின் மக்கள் அமைப்பின் சரஸ்வதி, தேசிய கலை இலக்கியப் பேரவை எஸ்.டொன்போஸ்கோ, சிறு உற்பத்தியாளர் சங்க ரத்னகாந்தன் உட்பட பல முக்கியஸ்தர்களும் பெரும் திரளான மக்களும்,தொழிலார்கள்  கலந்து கொண்டு பொதுக் கூட்டத்துடன் பேரணியை நிறைவு செய்தனர்.

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக