சனி, 17 மே, 2014

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பெற்றுச் செல்லும் ஆண்களிடம் கட்டணம் அறவிடப்பட மாட்டாது.....!!!!!!

இந்நாட்டு ஆண் உழைப்பாளர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சேர்த்துக் கொள்ளப்படும்போது, அவர்களிடமிருந்து கட்டணம் அறவிடாதிருப்பதற்காக ஆவன செய்யவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா அறிவித்துள்ளார்.

தற்போது வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பெற்றுச் செல்லும் பணிப்பெண்கள் வேலைக்கமர்த்தப்படும்போது, அவர்களிடமிருந்து எந்த வொரு தொகையும் அறவிடப்படுவதில்லை. மேலும் அவர்களுக்கு உதவித்தொகையும்
வழங்கப்படுகின்றது.

அதேபோல, ஆண் பணியாளர்களுக்கும் அந்நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஆவன செய்வது மிகவும் பொருத்தமானது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, தொழிலில் அமர்த்தப்படும்போது எந்தவொரு கட்டணமும் அவர்களிடமிருந்து அறவிடக்கூடாது என்ற பொது உடன்பாட்டுக்கு தற்போது வந்துள்ளதாகவும், வெளிநாட்டு உழைப்பாளர்களின் உழைப்பினை தனது நாடுகளுக்கு அனுப்பும்போது கட்டணம் அறவிடாமல் செயற்படுகின்ற நம்பிக்கையான முதலீட்டு நிறுவனங்களை தெரிவுசெய்வதற்கான பிரேரணைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக