சனி, 2 ஜனவரி, 2010

பிரபாகரன் தலைமையில் ஈழப் போராட்டம் தொடரும்: வைகோ..!!

பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார். அவர் தலைமையில் ஈழப் போராட்டம் தொடரும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2010 புத்தாண்டு தமிழ் நாட்டில் சூழ்ந்துள்ள அவலங்களையும், நலிவுகளையும் போக்கும் ஆண்டாக அமைய வேண்டும். கடந்த ஆண்டு தமிழர்களுக்கு துயர் மிகுந்த ஆண்டாக அமைந்தது. இலங்கையில் மிகப்பெரிய இனப்படுகொலை நடத்தப்பட்டது.
மத்திய அரசு அதற்கு உறுதுணையாக இருந்தது. இலங்கை தமிழர்களுக்கு தமிழ் ஈழம் அமைவது தான் நிரந்தர தீர்வாகும். இப்போது அந்த பிரச்சினையை திசை திருப்ப முள்வேலி முகாமில் வதைபடும் தமிழர்களை மீட்பது பற்றி பிரசாரம் செய்து வருகிறார்கள்.
பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார். பிரான்ஸ், கனடா, போன்ற நாடுகளில் தமிழ் ஈழத்துக்கு ஆதரவான வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதே போல் தமிழ் நாட்டிலும் வாக்கெடுப்பு நடத்தும் சூழ்நிலை வரும். பிரபாகரன் தலைமையில் தனி தமிழ் ஈழ போராட்டம் தொடரும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக