சனி, 2 ஜனவரி, 2010

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி. வண. இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்..!!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி.வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையை இன்று (01) முற்பகல் சந்தித்துக் கலந்துரையாடினார். ஆயரின் இல்லத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாகவும் இருவரும் கலந்துரையாடினர். இதன்போது கருத்துத் தெரிவித்த ஆண்டகை அவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்னெடுக்கும் மக்கள் பணிகளைப் பாராட்டியதுடன் அவரது மக்கள் பணிகளுக்கு மன்னார் மாவட்ட மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் தெரிவித்தார். மேற்படி சந்திப்பில் ஈ.பி.டி.பி.யின் சர்வதேசப் பொறுப்பாளர் மித்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக