சனி, 28 பிப்ரவரி, 2015

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட உள்ளார் பிரசாந்த...!!

கொலை அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றிருந்த நிலையில் நேற்று நாடு திரும்பிய பொலிஸ் திணைக்களத்தின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயகொடி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு வருடத்திற்கு முன்னர் ரகசியமான முறையில் நாட்டில் இருந்த வெளியேறிய அவர், நேற்று நாடு திரும்பிய நிலையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் நாட்டை விட்டு வெளியேறிதாக கூறியிருந்தார்.

பிரசாந்த ஜயகொடி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட உள்ள நிலையில், தற்போது அதன் பணிப்பாளராக பணியாற்றி வரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எல். ரணவீர எல்பிட்டிய
பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட உள்ளார்.

பிரசாந்த ஜயகொடி பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பணியாற்றி போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அழுத்தங்களுக்கு அடிப்பணியாது நேர்மையாக பணியாற்றியதன் காரணமாக கொலை அச்சுறுத்தலை எதிர்நோக்கினார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் தான் விரும்பியவாறு ஊடக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத காரணத்தில் பிரசாந்த ஜயகொடி இரத்தினபுரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக அவர் நாட்டை வெளியேறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக