ஞாயிறு, 5 அக்டோபர், 2014

தமிழ் மொழியை இழந்தால் தமிழனம் அடையாளத்தை இழந்துவிடும்: ஜேர்மனியில் மாவை!!


புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழி, கல்வியை மட்டுமன்றி இசை, கலை, கலாசாரம், ஆடல் பாடல்களையும் வளர்த்து வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு மாவை சேனாதிராஜா தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் நேற்று ஆரம்பமான உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 12வது மாநாடு கோலாகலமாக நடைபெற்ற வருகின்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
தலைவர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தமிழர்கள் வாழ்கின்ற இடங்களிலெல்லாம் தமிழ் வாழ வேண்டும் என்பதற்காக உலகத்தமிழ் பாண்பாட்டு இயக்கத்தினர் இதய தாகத்தோடு, உணர்வுகளோடும் கொள்கை, இலட்சியப் பற்றோடும் இயங்கி வருவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழை வாழ வைக்க வேண்டுமென்று இந்த மாநாட்டை நடத்தும் உலகத்தமிழ் பாண்பாட்டு இயக்கத்தினருக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

பண்பாடு என்பது எமது வாழ்வின் உயர்ந்த ஒழுக்கத்தைப் பற்றியே கூறுகிறது.

தமிழ் மொழியை நாங்கள் பேசாவிட்டால், அதனைக் கையாளாவிட்டால், அதில் வாழ்வும் வளமும் பெறாது விட்டால் தமிழர்களாக இருக்க மாட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக