வியாழன், 21 அக்டோபர், 2010

1990ம்ஆண்டு இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் பிரதி அமைச்சர் கருணா மன்னிப்புக்கோர வேண்டும்-பிள்ளையான்..!

கிழக்கு மாகாணத்தில் 1990ம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் தற்போதைய மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் கருணா மன்னிப்புக்கோர வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தில் சுமார் 600 பொலீஸ் உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் கருணாவிற்கு தொடர்பிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த சந்தர்ப்பத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட பொலீஸ் உத்தியோகத்தர்களின் குடும்பங்களின் மன்னிப்பு கோர வேண்டியதன் அவசியம் குறித்து உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு எழுப்பிய வினாவிற்கு பிள்ளையான் பதிலளித்துள்ளார். புலிகள் அமைப்பில் இணைந்தபோது தமக்கு 16வயது எனவும், இந்தத் தாக்குதல்களுக்கு தம்மை வழிநடத்திய கருணா அம்மானே சம்பவத்திற்காக மன்னிப்பு கோரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக