செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு அனைத்துப் பிரஜைகளினதும் பெரும்பான்மை அங்கீகாரம் அவசியமானது -ஜனாதிபதி..!

இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு அனைத்துப் பிரஜைகளினதும் பெரும்பான்மை அங்கீகாரம் அவசியமானது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரலுக்கு முன்னர் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் முடிவுகளையடுத்து அதில் தெரிவாகும் தமிழ்த் தலைமைகளுடன் கலந்துரையாடி, இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை முன் வைக்கவுள்ளார் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்தியாவின் என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலுக்குப் பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்படும் என ஜனாதிபதி அளித்த உறுதிமொழி தொடர்பாகக் கேட்டபோதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இனப்பிரச்சினைத் தீர்வுக்கு பெரும்பான்மையினர் இணக்கம் தெரிவிக்கவேண்டும். பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்ளாத தீர்வை நடைமுறைப்படுத்த முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இந்நிலையில் பெரும்பான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஏற்கனவே இந்தியாவின் உதவியுடன் அரசமைப்புக்கான 13வது திருத்தம் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்டது. எனினும், அதற்கு மேலதிகமாக அதிகாரத்தை தமிழ்த் தரப்பு கோருகிறது. இதற்கு பெரும்பான்மையினரின் இணக்கம் தேவைப்படுகிறது. என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக