ஞாயிறு, 31 ஜனவரி, 2010

மஹிந்தவின் சிந்தனை - II உடனடியாக நடைமுறைப்படுத்த பணிப்புரை..!!

மஹிந்தவின் சிந்தனை-’எதிர்கால நோக்கு’ இரண்டாம் பாகத்தை எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
மஹிந்தவின் சிந்தனையில் முன்வைக் கப்பட்டுள்ள பல்வேறு யோசனைகளை முன்வைத்த வளவாளர்களை அலரிமாளிகை யில் சந்தித்துப் பேசிய ஜனாதிபதி இந்தப் பணிப்புரைகளை விடுத்துள்ளார்.
வளவாளர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, “எவ்வித தாமதமும் இல் லாமல் மஹிந்த சிந்தனையை நடை முறைப்படுத்துங்கள்” என்றார்.
இலங்கையை ஆசியாவிலேயே வர்த்தக, விமான, கடற்போக்குவரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாற்றுவதற்காகச் செயற்பட வேண்டும். இதன்மூலம் மக்களின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளவும் நாடு முக்கிய பங்காற்ற முடியும்.
வாழ்க்கைச் செலவைக் குறைப்பதோடு விவசாய அபிவிருத்தியை அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இந்த மஹிந்த சிந்தனை ஆலோசனை மூலம் நாடு சுபீட்சம் பெறும். ஒழுக்கமுள் ளதும் சட்டத்தை மதிப்பதுமான சமூகத்தைக் கட்டியெழுப்பி வீடமைப்பு, மின்சாரம், நீர்விநியோகம் மற்றும் தொடர்பாடல் வளங்களை உடனடித் தேவையாகக் கருதி பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக