சனி, 30 ஜனவரி, 2010

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் வாழ்த்து..!!

ஜனாதிபதி தேர்தல் வெற்றி தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலானோர் வாக்களித்தமை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது. ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துகொள்ள இலங்கை மக்கள் காட்டி வரும் ஆர்வம் இந்தத் தேர்தலின் மூலம் வெளிப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் குறப்பிட்டுள்ளது.
எனினும், தேர்தல் காலத்தில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் துணைத் தலைவர் கெதரீன் அஸ்டன் தெரிவித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் நாடு முழுவதிலும் ஜனநாயக ரீதியில் நடத்தப்பட்ட தேர்தலை வரவேற்பதாக சுட்டிகாட்டியுள்ளார்.
தேர்தல் வெற்றி தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படத்தயார் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
இலங்கையின் சகல மக்களுக்கும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல் பிரச்சாரக் காலத்தில் இடம்பெற்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடுகள் தொடர்பில் சரியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
வேட்பாளர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமானதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் முயற்சிகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக