சனி, 30 ஜனவரி, 2010

மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த வேண்டும் -ஜப்பான் கோரிக்கை..!

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தராஜபக்ஷவை வெற்றியீட்டியதை தொடர்ந்து ஜப்பான் வெளிநாட்டமைச்சர் கட்சுயா ஒசாடா நேற்று வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் மீள்குடியேற்றத்தை துரிதமாக பூர்த்தியசெய்வதோடு தேசிய நல்லிணக்கத்துக்கான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் வேண்டும் என்று ஜப்பான் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது இந்த குறிக்கோள்களுக்காக இலங்கை அரசு செய்யும் முயற்சிகள் வெற்றியடைய ஜப்பான் ஆதரவு அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனவரி 26ம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தராஜபக்ஷ மீண்டும் தெரிவுசெய்யப்பட்டிருப்பதை ஜப்பான் வாழ்த்துகிறது கடந்த ஒக்டோபரிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தை இலங்கை அரசு துரிதப்படுத்தி பூர்த்திசெய்யமென ஜப்பான் கருதுகிறது நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப இலங்கை மக்கள் ஒன்றிணைவார்கள் என்றும் அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக